×

#BREAKING அதிக மின் கட்டண புகார்- ஆய்வு செய்ய உத்தரவு

 

கூடுதல் மின் கட்டண புகார் தொடர்பான மின் இணைப்புகளை மறுகணக்கீடு செய்ய மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஜூலை மாதத்தில் பல்வேறு இடங்களில் அதிக மின் கட்டணம் வந்ததாக நுகர்வோர் புகார் எழுப்பினர்.  புகாரை அடுத்து ஆய்வு செய்ததில் மின் கணக்கீட்டில் குளறுபடி நடந்தது அம்பலமானது. மே மாதத்தை விட ஜூலையில் 3.7 லட்சம் மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வந்தது உறுதியானது. 5,6 இடங்களில் மட்டுமே மின் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாகவும், சாதாரண பயன்பாட்டுக்கே கூடுதல் கட்டணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருந்தார். 

இந்நிலையில் கூடுதல் மின் கட்டண புகார் தொடர்பான மின் இணைப்புகளை மறுகணக்கீடு செய்ய மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் மின் கட்டண புகார் குறித்து மூத்த அதிகாரிகள், மறு ஆய்வு செய்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும், மேலும், இந்த ஆய்வின் போது ஏதேனும் பிழை கண்டறியப்பட்டால், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.