×

செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு!!

 

செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைதாகி ஓராண்டாகியுள்ள அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாகக் காட்டக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.