சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்..!
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகன் செப்டம்பர் 30-ம் தேதி, தனது சாட்டை யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில், கருத்துகள் தெரிவித்திருந்ததாகக் கூறி, தவெக நிர்வாகி ஒருவர் சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சாட்டை துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வீடியோவில் யாருக்கும் எதிராக எந்த அவதூறும் ஏற்படுத்தவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், மனுதாரரின் கோரிக்கை பதிவு செய்ததுடன் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.