×

ஜென்சி இளைஞர்களுக்கு பட்ஜெட்டில் வெளியான அசத்தலான அறிவிப்புகள் ஒர் பார்வை..!

 

ஜென்சி இளைஞர்களுக்கு வெளியான அசத்தலான அறிவிப்புகள்

  • ’சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ்’ திட்டம் - முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணிநேரப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
  • ‘பள்ளி நிறைவுத் திட்டம்’ – 3,734 பள்ளிகள், 2,132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும். இதற்கு நடப்பாண்டிற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் – 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகம் மற்றும் சீருடை விலையில்லாமல் வழங்கும் நவீன உண்டு, உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும்.
  • 38 மாவட்ட மைய நூலகங்கள் உள்ளிட்ட பொது நூலகங்கள் டிஜிட்டல் கற்றல் மற்றும் புத்தாக்க மையங்களாக மறுவடிவமைக்கப்படும்.
  • 11 ஆம் வகுப்பு பயிலும் 5.32 இலட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும்.
  • ’வெற்றி மடிக்கணினித் திட்டம்’ கல்லூரி மாணவர்களுக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு 77 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • ‘TN-SUDAR’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் (TNSHIC) – அரசு - தனியார் கூட்டாண்மை (PPP DBFOT) முறையில் ஏற்படுத்தப்படும்.
  • ஒரு இலட்சம் படுக்கை வசதிகளுடன் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்படும்.
  • 2027-28 கல்வியாண்டில் மதுரையில் 300 மாணவர் சேர்க்கையுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.
  • வாகன மெக்கானிக்குகள் மற்றும் வாகனப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள 22,500 நபர்களுக்கு மின்சார வாகனம் மற்றும் மின்கலன் பராமரிப்புப் பயிற்சி வழங்கப்படும்.
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் தொழிற்பிரிவு வழங்கப்படும்.
  • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் SSC, RRB, IBPS ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
  • ’வெற்றி திறன் பயிற்சித் திட்டம்’ – நடப்பாண்டில் 12 இலட்சம் கல்லூரி மாணவர் மற்றும் 1 இலட்சம் வேலையில்லா இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி; முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்குப் பணியிடப் பயிற்சி அளிக்கப்படும்.
  • ‘செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சித் திட்டம்’ – சென்னை IIT உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து 2031-க்குள் 5 இலட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி வழங்கப்படும்.
  • விளையாட்டுத் திறன்மிக்க 8 முதல் 18 வயது மாணவர்களுக்கு உலகத்தரப் பயிற்சி வழங்கப்படும்.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணிநேர விளையாட்டுப் பாடவேளை அறிமுகம் செய்யப்படும்.
  • ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியிலும் அருகாமைப் பகுதிகளில் விளையாட்டு வசதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.
  • ’அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டம்’ – மாணவர் ஒருவருக்கு அதிகபட்சம் 36 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்..
  • பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 17 முதல் விரிவாக்கம் செய்யப்படும்.
  • திருநர்களுக்குத் திறன் பயிற்சி மற்றும் மானியத்துடன் சுயதொழில் வங்கிக் கடன் வழங்கப்படும்.
  • இந்தியாவின் முதல் பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமான ‘அறிவகம்’ உருவாக்கப்படும்.
  • காலிப் பணியிடங்கள் ஆண்டு தேர்வுத் திட்டம் மூலம் நிரப்பப்படும்; சேவை உரிமைச் சட்டம் வடிவமைக்கப்பட்டு இயற்றப்படும்.
  • முதல் தலைமுறை பட்டதாரி, வருமான மற்றும் சாதிச் சான்றிதழ்கள் மூன்றடுக்குச் சரிபார்ப்பு முறையில் விரைவாக வழங்கப்படும்.
  • 300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தலா
    5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாளுவன்குப்பம் மற்றும் காவேரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட தொல்லியல் தலங்களுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.