நாளை கோவை வருகிறார் முதல்வர் விஜய் - பயண விவரம் இதோ..!!
முதல்வர் விஜய் நாளை (16ம் தேதி) காலை 11:00 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்க வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து அவிநாசி ரோடு வழியாக காலை 11:45 மணிக்கு அறிவுலகம் வந்தடைகிறார். அங்கு கல்வெட்டை திறந்து வைத்து அறிவுலகத்தை பார்வையிடுகிறார்.
விண்வெளியில் செல்வதை போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய ஸ்பேஸ் லிப்ட்டில் பயணிப்பாரா, அனைத்து தளங்களுக்கும் செல்வாரா என்பது அன்றைய தினம் அவர் எடுக்கும் முடிவு.2வது தளத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாமா என்கிற ஆலோசனை நடந்து வருகிறது.
அறிவுலகம் வளாகத்தில் மேடை அமைக்கப்படுகிறது. முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார். 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படும். மதியம் 1:05 மணி வரை விழா நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மதியம் 1:06க்கு காந்திபுரத்தில் இருந்து புறப்படும் முதல்வர், 1:40க்கு விமான நிலையம் சென்றடைவார்.விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை சாலை மார்க்கமாகவே காரில் வர இருக்கிறார். ரோடு ஷோ நடத்தவும் திட்டம் உள்ளது