இன்று முதல் அமலாகும் 5 முக்கிய மாற்றங்கள்… தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
இன்று முதல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு, வங்கி சேவைகள், கே.ஒய்.சி. நடைமுறை, எல்பிஜி சிலிண்டர் விலை மற்றும் வருமான வரி தாக்கல் விதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு நடைமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் இணைந்து 'மத்திய வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு' (CKYC) 2.0 அமைப்பைச் செயல்படுத்துகின்றன. பயனர் ஒப்புதலுடன் நிதி நிறுவனங்கள் மத்தியப் பதிவேட்டில் உள்ள KYC தகவல்களை நேரடியாக அணுகலாம். இது ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கும் தேவையைத் தவிர்ப்பதோடு, போலி ஆவணங்கள் மற்றும் மோசடிகளையும் தடுக்க உதவும்.
இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, இனி தட்கல் புக்கிங் தொடங்கும் நேரத்திலேயே டோக்கன்களும் வழங்கப்படும். இதனால் முன்பதிவு மையங்களில் கூட்ட நெரிசல் குறைவதுடன், பயணிகளின் காத்திருப்பு நேரமும் குறையும்.
அதேபோல், மத்திய கே.ஒய்.சி. 2.0 (CKYC 2.0) நடைமுறை அமலுக்கு வருவதால், வாடிக்கையாளர்களின் ஒப்புதலுடன் மத்திய பதிவேட்டில் உள்ள தகவல்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் நேரடியாக பயன்படுத்த முடியும். இது நிதி மோசடிகளை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வழக்கம்போல் ஆகஸ்ட் 1-ம் தேதி வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்க உள்ளன. இதேபோல், சில வங்கிகள் கிரெடிட் கார்டு விதிகள், ரிவார்டு பாயிண்டுகள், சேவைக் கட்டணங்கள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களில் மாற்றங்களை அறிவிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித முடிவும் கடன் மற்றும் வைப்புத் தொகை வட்டியை பாதிக்கக்கூடும். மறுபுறம், 2026-27 நிதியாண்டுக்கான ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு ஜூலை 31-இல் முடிவடைந்துள்ளதால், அதற்குப் பிறகு தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
எனினும், ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களை ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யலாம் என்றும், தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கான தனித்தனி காலக்கெடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் முதல் சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள், ஆண்டு கட்டணம் மற்றும் சேவை கட்டணங்களில் மாற்றங்களைச் செய்யும். அதேபோல, ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளைப் பொறுத்து மாறுபடலாம். இது பொதுமக்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடும். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான விடுமுறைப் பட்டியலில் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த 14 நாட்களும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது. இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை விடுமுறைகளோடு ஞாயிறு விடுமுறை மட்டுமே பொதுவானதாக இருக்கும். அதேபோல, ஆகஸ்ட் 15 அனைத்து மாநிலங்களுக்கும் பொது விடுமுறை. மற்ற விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம்.