×

சொந்த மகள் போலவே சித்ராவை எண்ணினோம்: ஹேமநாத்தின் பெற்றோர்

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. அவரது கன்னத்தில் காயம் இருந்ததால் அவர் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 

விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

அவரது கன்னத்தில் காயம் இருந்ததால் அவர் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதே சமயம் சித்ராவின் குடும்பத்தினர் தரப்பில், அவர் கணவர் ஹேமந்த் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

இந்நிலையில் ஹேமநாத்தின் பெற்றோர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ““சொந்த மகள் போலவே சித்ராவை எண்ணினோம். சொந்த மகளை இழந்த மனநிலையில் தான் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாங்கள் எந்த வரதட்சணையும் கேட்கவில்லை. மருமகளாக வந்தாலே போதும் என இருந்தோம். வேறு எதுவும் கேட்கவில்லை. சித்ரா குடும்பத்தினர் அதிகமாக பேசிவிட்டனர். மனசு கஷ்டமாக இருக்கிறது. என் மகன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது. ஹேம்நாத் வெளியே சென்றால் எப்போதாவது குடிப்பது உண்டு. எங்கள் மகனை கொலைக்காரன் எனக்கூறுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொலை செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது ஆறுதல். கொலைக்கான காரணம் வெளியே வர வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் சித்ராவின் இறப்பு பேரிழப்பு. ஹேம்நாத் மீது மொத்த பழியும் விழுந்துள்ளது.” என தெரிவித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.