தவெக மாநாட்டால் கடும் போக்குவரத்து நெரிசல்
Aug 21, 2025, 15:43 IST
தவெக மாநாட்டால் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னுமிடத்தில் மிக பிரம்மாண்டமாக தவெக 2வது மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. பாதுகாப்பு பணியோடு சேர்த்து ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை தீவிரம் காட்டிவருகின்றனர். தவெக மாநாட்டால் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மதுரை வலையங்குளம் வழியாக தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் வலையங்குளம் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.