×

பாமக மாநாட்டிற்கு படையெடுக்கும் தொண்டர்களால் ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்

 

திருவிடந்தையில் சற்று நேரத்தில்  பா.ம.க மாநாடு துவங்க உள்ள நிலையில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநாட்டை நோக்கி வருவதால்  புதுச்சேரி - சென்னை ECR கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் திருவிடந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பா.ம.க மாநாட்டு நோக்கி வருவதால் திருவிடந்தை, வடநெம்மேலி, புதிய கல்பாக்கம் ஆகிய பகுதியில் வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்க்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் திருவிடந்தை செல்ல பொது போக்குவரத்து தடை விதித்துள்ளனர்.

திருவிடந்தை பா.ம.க மாநாட்டிற்கு வரும் வாகனங்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் வாகங்களை பூஞ்சேரியில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக அனுப்பி வைக்கின்றனர். சென்னையில் இருந்து கிழக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அனைத்து வாகனங்களையும் தற்போது வரை வழக்கம் போல் அனுமதித்து வருகின்றனர்.