வெளுத்து வாங்கும் மழை : மாணவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்ப முடிவு..!
Oct 22, 2025, 14:40 IST
வேலூரில் நேற்று மாலை முதல் அவ்வப்போது பெய்து வந்த மழை அதிகாலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது. மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இந்நிலையில் மழை நீடிப்பதால் மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்ப அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்துக்கு இன்று (அக்.22) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இன்று பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஒரு சில பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.