தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை வானிலை மையம் அறிக்கை:
ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6மாவட்டங்களில் இன்று (செப் 29) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (செப் 30)
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 1ல்
நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களில் அக்டோபர் 1ம் தேதி ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.