×

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை : மின்வெட்டு காரணமாக மக்கள் அவதி!

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கினாலும் சென்னையை பொறுத்தவரை பெரிதாக மழை பெய்யவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி,காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், ஆவடி , திருமுல்லைவாயில், பட்டாபிராம் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. அத்துடன் வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், அம்பத்தூர், பாடி,கொரட்டூர் முகப்பேர் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
 

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கினாலும் சென்னையை பொறுத்தவரை பெரிதாக மழை பெய்யவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி,காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், ஆவடி , திருமுல்லைவாயில், பட்டாபிராம் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. அத்துடன் வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், அம்பத்தூர், பாடி,கொரட்டூர் முகப்பேர் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மேலும் பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணமழையின் காரணமாக மின் இணைப்பு தூண்டிக்கப்பட்டது. இதுதவிர சென்னையின் மற்ற பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்தால் தவித்து வந்த சென்னை வாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.