×

தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட, 14 மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் மழை..!!

 

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில், சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.