×

கனமழை- ஏரி கால்வாயில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி

 

ஆரணி அருகே ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் பெரிய கால்வாயில் 3 வயது குழந்தை தவறி விழுந்து பலியானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த கனமழை பெய்த்துவருகின்றன. இதனிடையே அடுத்த 3 மணி நீடிக்கும் என்று வானிலை ஆராய்சச்சி மையம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஆரணி அருகே வளைகாரன்குன்று கிராமத்தை சேர்ந்த டிரைவர் மாதவன்- பிரபா தம்பதியினரின் 3 வயது குழந்தை பிரதீப்(3),  இன்று காலையில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள ஏரி கால்வாயில் தவறி விழுந்து நீரில் முழ்கி குழந்தை பரிதாபமாக பலியானது. குழந்தையின் பெற்றோர் அக்கம் பக்கம் தேடி, பின்னர் ஏரி கால்வாயில் சுமார்100 அடி ஆழத்தில் குழந்தையை மீட்டனர். குழந்தையை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் வரும் வழிலேயே குழந்தை இறந்துவிட்டதாகமருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தகவலறிந்த வந்த களம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.