×

கொட்டி தீர்த்த மிக கனமழை: பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 28செமீ மழை!

கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து பல மணிநேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. கடலூரில் பெய்த கனமழையால் மக்கள் தங்கள் இயழ்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். கடலூரில் பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 28 சென்டிமீட்டர், சேத்தியாத்தோப்பில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொட்டித்
 

கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து பல மணிநேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. கடலூரில் பெய்த கனமழையால் மக்கள் தங்கள் இயழ்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

கடலூரில் பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 28 சென்டிமீட்டர், சேத்தியாத்தோப்பில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் புவனகிரியில் 19 சென்டிமீட்டர், சிதம்பரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
.அதேபோல் லால்பேட்டையில் 8 சென்டி மீட்டரும், காட்டுமன்னார்கோவிலில் 7 சென்டி மீட்டரும், கீழணை பகுதியில் 6 சென்டி மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது.

கடலூரில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் உழவர் சந்தையில் குவிந்துள்ளனர். அத்துடன் மழையால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.