#HEAVY RAIN : நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்...!!
Oct 22, 2025, 09:46 IST
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காண அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதி கனமழையின் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், மழை பெய்துகொண்டே இருப்பதால், மலைப்பாதையில் அவர்கள் ஊர் திரும்புவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.