கொட்டும் கனமழை...வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வர திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல்..!!
Oct 25, 2025, 22:18 IST
கனமழையின் காரணமாக திருப்பதி மலைப்பகுதியில் பாறைகள், கற்கள் பெயர்ந்து விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
எனவே, திருமலைக்கு வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அடுத்த சில தினங்களுக்கு திருப்பதி மலைப்பகுதியில் மழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.