×

நேற்றிரவு முதல் கனமழை : சாலைகளில் வெள்ளம்; மிதக்கும் கடலூர்

கனமழை காரணமாக கடலூர் நகர் பகுதியில் 18.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை ,சேலம், ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது . இந்நிலையில் கடலூரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கடலூர் நகரில் 18.5 செமீ., ஆட்சியர் அலுவலகம் 16 செமீ.,
 

கனமழை காரணமாக கடலூர் நகர் பகுதியில் 18.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை ,சேலம், ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .

இந்நிலையில் கடலூரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கடலூர் நகரில் 18.5 செமீ., ஆட்சியர் அலுவலகம் 16 செமீ., வானமாதேவி 13.5 செமீ மழை பதிவாகியுள்ளது. குறிஞ்சிப்பாடி 10 செமீ., பரங்கிப்பேட்டை, புவனகிரியில் தலா 7 செமீ, மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. கடந்த சில மணிநேரமாக பெய்த கனமழை காரணமாக புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. புதுச்சேரி, காலாபேட், கனகசெட்டிகுளம், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் மழை நீர் பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.