3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?
3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 3 நாட்களும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.