×

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

3 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கனமழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெய்த கனமழையால் தேவசமுத்திரம் ஏரி நிரம்பிய
 

3 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கனமழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெய்த கனமழையால் தேவசமுத்திரம் ஏரி நிரம்பிய நிலையில், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழந்ததால் மக்கள் அவதிப்குள்ளாகி இருக்கின்றனர். தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனிடையே, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் 3 நாட்களுக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.