×

தமிழகம், புதுச்சேரியில் கனமழை!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் ,பூம்புகார் ,தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, பாதிரி, செம்பூர், மருதாடு, வெண்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருச்சி
 

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் ,பூம்புகார் ,தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, பாதிரி, செம்பூர், மருதாடு, வெண்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி ,சமயபுரம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் புதுச்சேரியில் காலாபேட், வில்லியனூர் ,அரியாங்குப்பம் ,பாகூர் ,காரைக்கால், திருநள்ளாரில் கனமழை பெய்து வருகிறது.