×

சென்னையின் பல இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. பருவமழைக்கு முன்னதாகவே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி
 

எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. பருவமழைக்கு முன்னதாகவே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் எழும்பூர், சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் மழை பெய்வதால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.