×

வெள்ளக்காடான சென்னை! மூழ்கிய தி.நகர் துரைசாமி சுரங்கபாதை

 

சென்னை புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

 வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பூவிருந்தவல்லி, நெற்குன்றம் மதுரவாயில், வானகரம் போரூர் ராமாபுரம்,திருவேற்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது இதனால்  மதுரவாயில் ,பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இரவு பெய்த தொடர் மழையால் தி.நகர், மேற்கு மாம்பலத்தை இணைக்கு துரைசாமி சுரங்கபாதையை மழை நீர் மூழ்கடித்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடலோர கிராமங்களில் 10 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசுவதால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதேபோல் ராயப்பேட்டை பெர்த்தோ தெருவில் 60 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் உயிர் சேதம் இல்லை.

இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தனித்த இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்