#BREAKING "சென்னையில் வரும் 25ம் தேதி கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் அக்.25ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு நவம்பரில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக்க தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை தென் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அக்.23ஆம் தேதி உருவாகும் தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர் துரை தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் அக்டோபர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.