×

சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!

தி நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அல்லது விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் வலுப்பெறும் என்றும்
 

தி நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அல்லது விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னையின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி தற்போது தி நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ராமாபுரம், வளசரவாக்கம்,போரூர்,விருகம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.