×

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை!

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது அந்த வகையில் நேற்று இரவு சென்னையில் பட்டினம்பாக்கம்,அடையாறு,மயிலாப்பூர்,சைதாப்பேட்டை,தேனாம்பேட்டை,தி.நகர்,நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம்,வடபழனி,கே.கே நகர்,கிண்டி,எழும்பூர், ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 9.45 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு முழுவதும் மிதமான மழையாக தொடர்ந்து
 

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது அந்த வகையில் நேற்று இரவு சென்னையில் பட்டினம்பாக்கம்,அடையாறு,மயிலாப்பூர்,சைதாப்பேட்டை,தேனாம்பேட்டை,தி.நகர்,நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம்,வடபழனி,கே.கே நகர்,கிண்டி,எழும்பூர், ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இரவு 9.45 மணிக்கு தொடங்கிய மழையானது இரவு முழுவதும் மிதமான மழையாக தொடர்ந்து நீடித்து பெய்தது.சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டதுடனும் மற்றும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.