"நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV வீடியோ!" – யு-டர்ன் அடித்த பைக் மீது பாய்ந்த கார்... காற்றில் பறந்த ஓட்டுநர்!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா மண்டலத்தில் உள்ள அழகடப்பா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் யு-டர்ன் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்திற்குள் பைக் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக் ஓட்டுநர் பல அடி உயரத்திற்குப் பறந்து சென்று சாலையில் கொடூரமாக விழுந்தார்.
இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த பைக் ஓட்டுநரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவசரம் அவசரமாக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இக் கொடூர விபத்தின் பகீர் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களை உரைய வைத்துள்ளது. அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை இக்காட்சிகள் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A horrific road accident was captured on CCTV near Alagadapa village in Miryalaguda mandal of Telangana's Nalgonda district. According to reports, a motorcyclist was attempting to take a U-turn when a speeding car approaching from behind rammed into the two-wheeler with tremendous force. The impact of the collision sent the biker flying several feet into the air before he crashed onto the road. The rider sustained critical injuries in the accident and was immediately rushed to a nearby hospital for medical treatment. The shocking CCTV footage of the collision has gone viral on social media, drawing attention to the dangers of overspeeding and careless driving. The visuals reportedly show the car crashing into the motorcycle while the rider was attempting to turn, resulting in a violent impact. Meanwhile, police have registered a case in connection with the accident and launched an investigation to determine the exact circumstances that led to the collision.
— Hate Detector 🔍 (@HateDetectors) November 2, 2026