×

கொரோனா இரண்டாம் அலை கைமீறிவிட்டதா?.. சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்!

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிந்த பிறகு, தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை பற்றியும் நீதிமன்றங்களில் தடுப்பு நடவடிக்கையை கையாளுவது பற்றியும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில் பதிலளித்த விஜயநாரயணன், கொரோனா இரண்டாம் அலை கைமீறிவிட்டதாக கூறினார். உடனே, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். அதன் படி, பிற்பகலில் ராதாகிருஷ்ணன்
 

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிந்த பிறகு, தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை பற்றியும் நீதிமன்றங்களில் தடுப்பு நடவடிக்கையை கையாளுவது பற்றியும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு தரப்பில் பதிலளித்த விஜயநாரயணன், கொரோனா இரண்டாம் அலை கைமீறிவிட்டதாக கூறினார். உடனே, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். அதன் படி, பிற்பகலில் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிபதியுடனான விளக்கத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிபதியிடம் விளக்கினேன். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கைமீறி விட்டதாக கூறப்பட்ட தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமானால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நாளை தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கைமீறிவிட்டதாக சுகாதாரத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வரவே முடியாது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், அந்த தகவல் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.