×

தலைமையாசிரியை மகனுக்கு திருமணம் : விழாவில் பங்கேற்ற 11 பேருக்கு கொரோனா!

தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரைச் சேர்ந்த 53 வயதான தலைமை ஆசிரியை ஒருவர் கடந்த பத்தாம் தேதி தனது மகனுக்கு கிருஷ்ணகிரியில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமண விழாவில் தலைமை ஆசிரியையின் உறவினர்கள் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று கலந்து கொண்டனர். இதையடுத்து தலைமையாசிரியை மற்றும் அவரின் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரைச் சேர்ந்த 53 வயதான தலைமை ஆசிரியை ஒருவர் கடந்த பத்தாம் தேதி தனது மகனுக்கு கிருஷ்ணகிரியில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமண விழாவில் தலைமை ஆசிரியையின் உறவினர்கள் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று கலந்து கொண்டனர்.

இதையடுத்து தலைமையாசிரியை மற்றும் அவரின் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருமண விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் 9 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் பங்கேற்றவர்கள் மூலம் பலருக்கும் தொற்று பரவி இருக்க அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் நடமாடும் வாகனம் மூலம் அவர்களின் அனைவரும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில் கூட கடந்த 3 மாதமாக அரூர் பகுதியில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த திருமண விழாவில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.