×

பணத்தை திருப்பித் தரமுடியாத பெண்களை படுக்கைக்கு அழைத்து வீடியோ எடுக்கிறார்.. கணவன் மீது மனைவி புகார்

வட்டிக்கு வாங்கிய பணத்தினை திருப்பித் தரமுடியாத பெண்கள வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைத்து அப்போது வீடியோவும் எடுத்து அப்பெண்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார் என கணவர் மீது மனைவி காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். கணவரின் இந்த அராஜக செயல்களுக்கெல்லாம் கள்ளக்காதலி உடந்தையாக இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த திவ்யாவுக்கும், சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தினை சேர்ந்த முத்துவுக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும்
 

வட்டிக்கு வாங்கிய பணத்தினை திருப்பித் தரமுடியாத பெண்கள வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைத்து அப்போது வீடியோவும் எடுத்து அப்பெண்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார் என கணவர் மீது மனைவி காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். கணவரின் இந்த அராஜக செயல்களுக்கெல்லாம் கள்ளக்காதலி உடந்தையாக இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த திவ்யாவுக்கும், சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தினை சேர்ந்த முத்துவுக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் தன் கணவருக்கு பல பெண்களுடன் தவறான பழக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அதை கேட்டு கணவருடன் சண்டை போட்டு வந்திருக்கிறார் திவ்யா. ஏஞ்சல் என்ற பெண்ணுடன் நிரந்தரமாக கள்ள உறவு வைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட திவ்யா, எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார் முத்து.

கொடுத்த பணத்தை திருப்பித் தர முடியாத பெண்களை படுக்கைக்கு அழைத்து அந்த சமயத்தில் வீடியோவும் எடுத்து வைத்து அப்பெண்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார் கணவர். இதற்கு அவரின் காதலி ஏஞ்சல் உடந்தையாக இருக்கிறார் என்றும், இதை தட்டி கேட்ட என்னையும் என் பெற்றோரையும் கொலை செய்து விடுவதாகவும் கணவரும், அவரது காதலில் ஏஞ்சலும் மிரட்டுகிறார்கள் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் திவ்யா.

ஆனால் திவ்யாவின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் முத்து. தனது சொத்து முழுவதையும் தன் பெயரில் எழுதி தரக் கேட்டார். இதற்கு ஒத்துக் கொள்ளாததால் அடியாட்களை அழைத்து வந்து தன்னை அடித்துவிட்டார் என்றும், அப்போதும் தான் சம்மதிக்காததால் தன்னை காரில் கடத்திச் சென்று அடித்து சித்திரவதை செய்து விரட்டி விட்டார் என்றும், இதுதொடர்பாக தான் கொடுத்துள்ள வழக்கு காவல் நிலையத்தில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ள முத்து, திவ்யா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.