அதிமுகவில் இருந்து விலகி ஐயூஎம்எல் கட்சியில் இணைந்தார்..!
Sep 24, 2026, 05:40 IST
அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்த ஷகிலா பானு மற்றும் அவரது கணவர் இம்தியாஸ் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex-MLA தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர். ஆளும் தவெக கூட்டணியில் ஐயூஎம்எல் அங்கம் வகிக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து பலரும் இணைந்து வருகின்றனர்.
அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சகோதரி ஷகிலா பானு மற்றும் அவரது கணவர் சகோதரர் இம்தியாஸ் ஆகியோர் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex-MLA அவர்கள் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.
— IUML Tamil Nadu (@IUMLTNOfficial) September 22, 2026
. #iuml pic.twitter.com/hGLxOoFhsd