×

இவரு தான் நிஜ தேசபக்தன்! சினிமா ஹீரோக்களை விட்டுட்டு பேருந்தில் யாரு படத்தை வரைஞ்சிருக்காரு பாருங்க!

 

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்கள் கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆவர்.

யார் இந்த சோபியா குரேஷி?

இந்திய ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் அதிகாரியாக 36 வயதான கர்னல் சோஃபியா குரேஷி செயல்பட்டு வருகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர், உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1999ஆம் ஆண்டு ராணவத்தில் சேர்ந்த இவர், 2006இல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் பணியாற்றினார். 2010 முதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு 18 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச ராணுவப் பயிற்சியில் இந்தியாவின்படைப்பிரிவை வழிநடத்திய ஒரே மற்றும் முதல் பெண் அதிகாரி இந்த சோஃபியா குரேஷியே ஆவார். மேலும்,லெப்டினெண்ட் கர்னல் சோஃபியா குரேஷி, ஒரு பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் முஸ்லிம் பெண் அதிகாரி ஆவார். ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவரது கணவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் படங்களை தனது புதிய பேருந்தில் வரைந்து பெருமை சேர்த்துள்ளார்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் தனது புதிய பேருந்தில் சினிமா நடிகர்-நடிகைகளின் படங்களுக்குப் பதிலாக, 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நாயகர்களின் படங்களை அச்சிட்டுள்ளார்.இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி (Colonel Sofiya Qureshi) மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் முகங்கள் பேருந்தில் இடம்பெற்றுள்ளன.

விளம்பரங்கள் மற்றும் சினிமா கவர்ச்சியைத் தவிர்த்து, உண்மையான தேசத் தியாகிகளையும் வீரர்களையும் பொதுவெளியில் கவுரவிக்கும் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.