×

திருச்சி கிழக்கு, கரூர் உட்பட 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை..! 

 

கரூர், திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வெற்றி தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால், இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தொடுத்திருக்கிறார்.அதை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு, இடைக்காலத் தடை விதித்தது.

நேற்று கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய், அங்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெளுத்துவிட வேண்டும் எனக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.