நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்..!
எர்ணாகுளம் தேவரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வனத்துறையினர் கடந் த, 2011, ஆகஸ்ட் மாதம், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலிருந்து யானை தந்தம் கண்டெடுக்கப்பட்டது. யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமம் அப்போது மோகன்லாலிடம் இல்லை.
பின்னர் கேரள அரசுக்கு மோகன்லால் சமர்ப்பித்த மனுவை தொடர்ந்து, யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை, 2015-ல் மாநில அரசு வழங்கியது.
இதை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கேரள அரசு, 2015-ல் மோகன்லாலுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக அரசின் கெசட்டில் அறிவிப்பு வெளியிடவில்லை. இது கேரள அரசின் தவறு. எனவே, யானை தந்தம் வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.