×

உங்க செல்போன் தொலைந்து விட்டதா?இதை செய்தால் உடனே கிடைத்துவிடும்..!!

 

காவல்துறை தரப்பில் கூறியதாவது, "காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ இணையதளம் இந்திய தொலைத்தொடர்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த CEIR இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம்.

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பெற்று CEIR இணையதளத்தில் பதிவு செய்து புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் கொடுத்தபின் மனுதாரர் செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும் மனுதாரர் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய நபரின் விபரங்கள் தொடர்பான அறிவிப்பு மனுதாரருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் உடனடியாக அனுப்பப்படும்.

இதன் மூலமாக தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போனை உடனடியாக மீட்க முடியும். 

சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.