டிகிரி முடிச்சிருக்கீங்களா? 13,745 வங்கி வேலைகள் தயார்! தமிழ்நாட்டிலும் வாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க!
பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராம வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) மூலம் ஒவ்வொரு வருடமும் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 28 மாநிலங்களில் செயல்படும் மண்டல கிராம வங்கிகளில் உள்ள 13,745 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழ்நாடு கிராம வங்கிகளில் மட்டும் 400 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
கிராம வங்கி வேலைவாய்ப்பு 2026
அலுவலக உதவியாளர் பதவியில் 8,222 பணியிடங்கள், அதிகாரி நிலை 1 கீழ் 4,256 பணியிடங்கள், பொது வங்கி அதிகாரி பதவியில் 666 பணியிடங்கள், ஐடி அதிகாரி பதவியில் 182 பணியிடங்கள், சிஏ அதிகாரி பதவியில் 81 பணியிடங்கள், சட்ட பிரிவு அதிகாரி பதவியில் 46 பணியிடங்கள், கருவூல மேலாளர் பதவியில் 18 பணியிடங்கள், மார்க்கெட்டிங் அதிகாரி பதவியில் 16 பணியிடங்கள், வேளாண் அதிகாரி பதவியில் 38 பணியிடங்கள் மற்றும் நிலை 3 அதிகாரி பதவியில் 220 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 13,745 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தகுதிகள் என்னென்ன?
2026-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 வரை இருக்கலாம். நிலை 1 அதிகாரி பதவிக்கு 18 முதல் 30 வயது வரையும், நிலை 2 அதிகாரி பதவிக்கு 21 முதல் 32 வயது வரையும் இருக்கலாம்.
அதே போன்று, நிலை 3 கீழ் உள்ள அதிகாரி பதவிக்கு 21 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு வழங்கப்படுகிறது.
என்ன படித்திருக்க வேண்டும்?
செப்டம்பர் 21-ம் தேதியின்படி, அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு கிராம வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
பல்வேறு துறைகளிலுள்ள அதிகாரி பதவிக்கு அத்துறைக்கு ஏற்ப பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதிகாரி பதவிகளுக்கு ஒரு ஆண்டு குறைந்தபட்சம் அனுபவம் தேவை. மூத்த மேலாளர் பதவிக்கு 5 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.
தேர்வு முறை என்ன?
அலுவலக உதவியாளர் மற்றும் நிலை 1 அதிகாரி பதவிக்கு மட்டும் முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு கணினி வழியில் கொள்குறி முறையில் நடத்தப்படும். தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
இதர நிலை அதிகாரி பதவிகளுக்கு ஒரு கட்ட தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள பட்டதாரிகள் https://www.ibps.in/ என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ. 175 செலுத்தினால் போதுமானது.
முக்கிய நாட்கள்
| விவரம் | தேதிகள் |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 21.09.2026 |
| முதல்நிலைத் தேர்வு | நவம்பர்/ டிசம்பர் 2026 |
| முதல்நிலைத் தேர்வு முடிவுகள் | டிசம்பர் 2026/ ஜனவரி 2027 |
| முதன்மைத் தேர்வு | டிசம்பர் 2026/ பிப்ரவரி 2027 |
| முதன்மைத் தேர்வு | முடிவுகள் ஜனவரி 2027 |
| நேர்காணல் | ஜனவரி/ பிப்ரவரி 2027 |
| பணி நியமனம் | பிப்ரவரி/ மார்ச் 2027 |
இத்தேர்வை எழுதும் விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில், தேர்வுக்கு முந்தைய பயிற்சி நவம்பர் மாதத்தில் ஆன்லைன் வழியாக அளிக்கப்படும் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.