காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தோல்வியா? அரசுக்கு எவ்வளவு இழப்பு?
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தி வரும் காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் (Bottle Buy-Back) திட்டத்திற்கு எதிரான போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இன்று (03-11-2026) மதியம் 3 மணி நிலவரப்படி,
- மொத்த கடைகள்:4,051
- திறக்கப்பட்ட கடைகள்:3,991
- மூடப்பட்ட கடைகள் (Pending): வெறும் 60 கடைகள் மட்டும்
- திறப்பு சதவீதம்: 98.52% கடைகள் திறப்பு! வெறும் 1.48% தான் மூடல்
பெரம்பலூரில் உள்ள 75 கடைகளில் 66 திறக்கப்பட்டுள்ளன, 9 கடைகள் மூடல்; கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல்லில் தலா 4 கடைகள் மூடல், நாகர்கோவில், காஞ்சிபுரம் (தெற்கு), ஈரோடு, திருச்சியில் தலா 3-5 கடைகள் மூடல், சென்னையில் உள்ள 61-ல் 60 திறக்கப்பட்டுள்ளன. 1 கடை மட்டும் மூடப்பட்டுள்ளது. போராட்டத்தை தவிடுபொடியாக்கும் விதமாக 11 மாவட்டங்களில் ஒரு கடை கூட மூடப்படவில்லை! கோவை (தெற்கு), கரூர், கிருஷ்ணகிரி, மதுரை (வடக்கு & தெற்கு), நாமக்கல், ஊட்டி, ராமநாதபுரம், தேனி, திருப்பூர், திருவள்ளூர் (கிழக்கு), விழுப்புரம்- இங்கெல்லாம் 100% கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப வாங்கும் புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதனால் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, கணக்கு வழக்கு சிக்கல், பாட்டில் உடையும் பிரச்சனை என ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு! அதற்காக 3 நாட்களாக கடைகளை மூடி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தினசரி சராசரியாக ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி வரை வருமானம் வரும். 3 நாட்களாக சுமார் 50-100 கடைகள் மூடப்பட்டதால், தினசரி சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை மட்டுமே இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 98.52% கடைகள் திறந்திருப்பதால் பெரிய இழப்பு இல்லை. முதல் நாள் 300+ கடைகள் மூடப்பட்ட நிலையில், 3-வது நாளில் 60 கடைகளாக குறைந்து விட்டது. அரசின் பேச்சுவார்த்தை மற்றும் எச்சரிக்கைக்கு பிறகு பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.