காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் தங்க பல்லி மாயமா?- பரபரப்பு புகார்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் தங்க பல்லி, வெள்ளி பல்லி மாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில், வரதராஜ பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும், தேவராஜ ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி வெள்ளி பல்லி சிலைகளை தரிசனம் செய்ய நாள்தோறும் ஆந்திரா கர்நாடகா, கேரளா மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதியில் வெளிப் பிரகாரத்தில் வடக்கு மூலையில் உள்ள பல்லி சிலைகளை தொட்டு தரிசனம் செய்பவர்களுக்கு,சகல பாவங்களும் நீங்கும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பல்லியை தொட்டு வணங்கு வது வழக்கம்.
தங்க பல்லி, வெள்ளி பல்லி கோவில் என பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோவிலில் சூரியன், சந்திரன் உடன் இருக்கும் வெள்ளி பல்லி, தங்க பல்லி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கை பட்டு மிகவும் தேய்ந்து போன நிலையில் இருந்தது. மேலும் பக்தர்கள் படிகளில் ஏறி பள்ளிகளை தொட்டு தரிசனம் செய்ய சிரமம் அடைந்து வந்தனர். இதன் காரணமாக பல்லி சிலைகள் இருந்த இடத்தில் புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவிலில் திருப்பணி நடப்பதால், பல்லி தரிசனம் தற்காலிகமாக தெற்கு பக்கத்தில் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியைச் களை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், வரதராஜ பெருமாள் கோவிலில் பழமையான தங்க பல்லி, வெள்ளி பல்லி சிலைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவற்றை மாற்ற முயற்சி நடப்பதாகவும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்,வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன் தினம் விசாரணை நடத்தினர். கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி, சிலைகள் பற்றியும், கோவிலில் உள்ள பல்லி அவை உள்ள இடத்தையும் காட்டி விளக்கி உள்ளார்.
ரங்கராஜ நரசிம்மன் என்பவர் கொடுத்த புகார் பொய்யானது, கோவிலில் உள்ள பல்லி சிலைகள் எங்கும் மாயம மாயமாகவில்லை. பழைய பல்லி சிலைகள் கோவில் நகை கொட்டடையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது தற்போது தரிசனம் செய்யும் பல்லி சிலைகள் 1970 ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது அது தங்கத்தினால் செய்யப்பட்டது இல்லை பித்தளை பல்லி தான் எனவும், தற்போது அது பக்தர்களின் கைபட்டு சேதமாகி விட்டதால், அதற்கு பதிலாக கடந்த 2012 ஆம் ஆண்டு பக்தர்கள் வழங்கி உள்ள பல்லி சிலைகளை துறை அதிகாரிகளின் அனுமதியை பெற்று வைக்கலாமா ஆலோசனை செய்து வருகிறோம்.
இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையரால் திருக்கோயில் நேரில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையிலும், கைவசமுள்ள ஆவணங்களையும் கவனமுடன் பரிசீலனை செய்ததிலும், ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் திருக்கோயிலில் (வரதராஜப் பெருமாள்) தங்கபல்லி மாயமானதாகவும், கோயிலில் உள்ள தங்கம். வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்த புகார் முற்றிலும் பொய்யானது. அதனால் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலைத் திருட்டுத் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்ட பொய்யான புகார் மீது சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை தெரிவித்துள்ளார்.