×

`மனிதம் எங்கே?!’- சாத்தை தந்தை- மகன் உயிரிழப்பால் கொந்தளித்த ஹர்பஜன் சிங் #JusticeForJayarajandFenix

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், “மனிதம் எங்கே” போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் திடீரென உயிரிழந்தனர். கடையை 5 நிமிடம் கூடுதலாக திறந்து வைத்திருந்ததால் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினரால் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவம் நாடு
 

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், “மனிதம் எங்கே” போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் திடீரென உயிரிழந்தனர். கடையை 5 நிமிடம் கூடுதலாக திறந்து வைத்திருந்ததால் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினரால் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, பாலிவுட், அரசியல்வாதிகள், நடுநிலையாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், சாத்தான்குளம் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.