தீபாவளிக்கு சொந்த ஊர் போவோருக்கு செம ஹேப்பி நியூஸ்..! – எழும்பூர், தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
எழும்பூர் - கன்னியாகுமரி நவ.,5 இரவு 11:50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06151), மறுநாள் மதியம் 3:15 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது. மறுமார்க்கத்தில் நவ.,9 இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06152), மறுநாள் மதியம் 12:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது.
ரயில் (06151) விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாகவும், ரயில் (06152) திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், வழியாகவும் செல்கின்றன.
தாம்பரம் - தென்காசி/செங்கோட்டை - தாம்பரம் நவ.,7 அதிகாலை 5:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06049), அன்று மாலை 4:45 மணிக்கு தென்காசி செல்கிறது. மறுமார்க்கத்தில் நவ.,9 மதியம் 3:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06050), மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்கிறது.தென்காசி (ரயில் 06050), கடையநல்லுார், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்கின்றன.விரைவில் முன்பதிவு தொடங்கவுள்ளன.