நகை பிரியர்கள் ஹேப்பி..!! சற்று குறைந்த தங்கம் விலை..!!
சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், தங்கம் விலையில் நாள்தோறும் ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒருநாள் குறையும் தங்கம் விலை மறுநாள் அதிகரித்தும், அதற்கு மறுநாள் குறைந்தும் காணப்படுகிறது.
சென்னையில் 22K தங்கத்தின் விலை நேற்று (நவ. 26), சவரனுக்கு ரூ.640 அதிகரித்தது. இந்நிலையில், இன்று (நவ. 27) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 30 குறைந்து, ரூ. 11,770க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.94, 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து, கிராமுக்கு ரூ.180க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.