"HAPPY DIWALI"-தீபாவளி வாழ்த்து சொன்ன ஜான் சீனா..!
Oct 21, 2025, 05:30 IST
16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனா, மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
இந்நிலையில் மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா தீபாவளி வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உலகெங்கிலும் ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.