×

பெண்களுக்கு குஷியான அறிவிப்பு..! மாதம் ரூ.25,000 கொடுக்கும் அரசு..! 

 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic Training And Dermaplaining Tranining Courses) பயிற்சிகளை வழங்குகிறது.   

இந்த பயிற்சி 90 நாட்கள் நடைபெற உள்ளது.  ராணிப்பேட்டை, கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. பயிற்சிக்கு செல்பவர்கள் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதிகள் என்னென்ன?

தாட்கோவின் இலவச அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க  வேண்டும். விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும்.  மேலும், 18 வயது  35 வயது வரை இருக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு கல்வித்தகுதியும் கிடையாது. 

தொழில் வாய்ப்பு

அழகுக்கலை என்பது இன்றைய காலத்தில் முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. இதன் மூலம், பிரபல பார்லரில் வேலை செய்வதோடு, மட்டுமில்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கலாம். நம் ஊரில் மட்டுமில்லாமல், சர்வதே அளவிலும் அழகுக்கலை துறையில் வேலை பார்க்கலாம். இந்த துறையின் மூலமும் கைநிறைய சம்பளமும் பெறலாம்.  இந்த நிலையில், அழகுக்கலை பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது. இந்த பயிற்சி முடிந்தவுடன் தகுதியானவர்களுக்கு பயிற்சி அளிக்கும்  நிறுவனத்தின்  மூலமாக தேர்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் சார்பாக வேலைவாய்ப்பும் கிடைக்கும். உங்களை தேர்வு செய்யும் நிறுவனம் மூலம் மாதம் ஊதியமாக வழங்கப்படும். மாதம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிப்பது எப்படி?

அழகுக்கலை பயிற்சி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tahdco.Com என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். சுய தொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து, வேலைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.