NEET Exam பரிதாபங்கள்- பேருந்தில் தவறவிட்ட ஹால் டிக்கெட் 30 கி.மீ. தொலைவிற்கு பறந்து வந்தது
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதவந்த மாணவன் அரசு பேருந்தில் ஹால் டிக்கெட் மறந்துவிட்டு சென்றதால் 30 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரையிலிருந்து பரமக்குடிக்கு வேறு ஒரு பேருந்துமூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்விற்கு வந்த மாணவன் அரசு பேருந்தில் ஹால் டிக்கெட் மறந்து விட்டு சென்றதால் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை வரை சென்று மீண்டும் பரமக்குடிக்கு அந்த மாணவனிடம் மீண்டும் ஹால் டிக்கெட் கிடைக்கப்பெற்றது. இந்தியா முழுவதும் இன்று இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவன் பரமக்குடியில் நீட் தேர்வு எழுத அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்போது பேருந்தில் ஹால் டிக்கெட், புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் இருந்த பேக்கை மறந்துவிட்டு பரமக்குடியில் இறங்கியுள்ளார்.
இதனை அடுத்து அந்த மாணவன் வந்த பேருந்து குறித்து விசாரித்த போது அந்த பேருந்து மானாமதுரை தாண்டி விட்டது என தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக பேருந்தை இயக்கிய ஓட்டுனர், நடத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் ஹால் டிக்கெட் பரமக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மாணவனிடம் அந்த ஹால் டிக்கெட் கிடைக்கப்பெற்றது. தேர்வுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நீட் தேர்வு எழுத அந்த மாணவன் ஹால் டிக்கெட் பெற்று தேர்வு மையத்திற்கு சென்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.