டெல்லி கணேஷ் இழப்பு கலைத்துறைக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும் - ஹெச்.ராஜா
Nov 10, 2024, 15:00 IST
குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.