இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை..!
Jul 6, 2026, 12:29 IST
1980ல் வெளியான நடிகர் ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் இளையராஜா இசையில் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் இடம் பெற்றிருந்தது. தனது பாடலை எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷின் படத்தில் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ் திரைப்படம் கடந்த மார்ச் 27ம் தேதி வெளியானது.
படம் வெளியாகி 3 மாதத்திற்கு பிறகு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .