×

"எல்லாரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா? என ஈபிஎஸ் யோசிக்கிறார்"- குருமூர்த்தி

 

அனைவரும் ஈபிஎஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டுமென சொல்வது ஈபிஎஸ்-க்கு பெருமைதான் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

கட்சியை பலப்படுத்தும் விதமாக அதிமுகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை அகற்றி நல்லாட்சி கொடுக்க முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செங்கோட்டையனின் கருத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, “செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது, அவரது குரல் கலக்குரல் இல்லை. ஈபிஎஸ்-யை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட ஒன்றாக இணைந்து அவரை ஏற்றுக்கொண்டால் கட்சிக்கு நல்லது. அனைவரும் ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என்பது ஈபிஎஸ்-க்கு தெரியும். எல்லாரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா? என ஈபிஎஸ் யோசிக்கிறார். அனைவரும் ஈபிஎஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டுமென சொல்வது ஈபிஎஸ்-க்கு பெருமைதான். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேற்றியதாக நான் நினைக்கவில்லை. இந்த நிலைமை மாறக்கூடும். 8 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது.” என்றார்.