×

தமிழன் படைத்த வரலாற்றுச் சாதனை: 16 வயதிலேயே CA முடித்து கின்னஸ் சாதனை..!!

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமணன் மெய்யப்பன்(16 ஆண்டு 141 நாட்கள்) துபாயில் வசித்து வருகிறார். 10 ம் வுகுபுபு முடித்த போது, விடுமுறை காலத்தை பயன் உள்ளதாக மாற்ற முடிவு செய்தார். அப்போது கோவிட் பெருந்தொற்றும் பரவிய காலம். இதனால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் அக்கவுண்ட்டிங்( ACCA( Association of Chartered Certified Accountants )) படிப்பில் கவனம் செலுத்தினர். இதற்கு அவரது தாயாரும் உதவினார். அவரும் சிஏ முடித்தவர். மகனுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.


ACCA படிப்பை முடித்த பிறகு நிதித்துறையில் மிக உயரிய படிப்பாக கருதப்படும் CFA முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நிதித்துறையில் முதுநிலை படிப்பு படித்து வருகிறார். மேலும் துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில், முதுநிலை ஆராய்ச்சி நிபுணர் ஆக பணியாற்றி வருகிறார். அவரது சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.