☰
×

சொத்து வாங்குறவங்களுக்கு பேரிடி... பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு இரட்டிப்பு! 

 

தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டில் பத்திரப்பதிவு வாயிலாக வருவாய் இலக்காக ரூ.35,000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 75,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் வழிகாட்டி மதிப்புகளை திருத்துங்கள் என பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் வழிகாட்டி மதிப்புகளை திருத்தி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் பதிவுத்துறை பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. வணிக வரித்துறையுடன் ஒப்பிட்டால், பத்திரப்பதிவு வாயிலாக ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். தற்போது அதிகபட்சமாக 30,000 கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கிறது. நடப்பாண்டு வருவாய் இலக்காக 35,000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படி வருவாய் கசிவுகளை தடுக்க, வழிகாட்டி மதிப்புகளை திருத்தி அமைக்க வேண்டும். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்புகளை திருத்தினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டில் 75,000 கோடி அளவு வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுங்கள்.கடந்த மாதம் பத்திரப்பதிவு வாயிலாக 1,950 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் வசூலானதை விட 147 கோடி ரூபாய் அதிகம்.


வழிகாட்டி மதிப்பு திட்ட நடவடிக்கையில், ஊரகப் பகுதிகளில் விவசாய நிலங்களின் குறைந்தபட்ச விலை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் விலை 10 முதல் 15 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். நகரங்களில் ஒரு சதுரடி நிலத்தின் குறைந்தபட்ச விலை 2,500 ரூபாய் முதல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழிகாட்டி மதிப்புகள் திருத்தப்படுகின்றன. ஜன.1 முதல் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் டிச.1ல் அமல்படுத்தும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 2.46 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.