குறுக்கே வந்த நாய் மீது ஆட்டோ மோதி ஓட்டுனர் உயிரிழப்பு
Feb 4, 2026, 21:20 IST
குறுக்கே வந்த நாய் மீது ஆட்டோ மோதி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டிபி.பாளையம் சேர்ந்வர் ஆட்டோ ஓட்டுனர் ஈசா (32). இந்நிலையில் இன்று மாலை தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பரதராமிக்கு செல்லும் போது திடீரென குறுக்கே வந்த நாய் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்துள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுனர் ஈசன் (32) உயிரிழந்துள்ளார். ஆட்டோவில் பயணித்த இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து பரதராமி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..